03.09.2010

இலங்கையில் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக அந்த நாட்டு அரசினால் பார்க்கப்படுகின்றார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அரசின் பயங்கரவாத இலக்காகவே இருந்து வருகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார். ஒக்ஸ்ஃபாம் நிறுவன முன் நாள் தொண்டரும்
03.09.2010

சரத் பொன்சேகாவின் புதல்விகள் சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள இந்து ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
03.09.2010

ஜயகொடி ஆராச்சிகே ஒல்கொட் பெரேரா எனப்படும் ஒல்கொட் என்ற போதைப்பொருள் வர்த்தகரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்த ஒல்கொட்டை, விசேட அதிரடிப் படையினர் மினுவன் கொடப் பிர தேசத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
03.09.2010

மெக்ஸிகோவில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் 25 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மெக்ஸிகோ இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். தமாயுலிப்பாஸ் மாநிலத்தில், மெக்ஸிகோ இராணுவத்தினர்..
02.09.2010

சிறிலங்காவினது முன்னாள் குடியரசு அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனத் தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாக கொழும்பினைத் தளமாகக் கொண்டியங்கும்....
02.09.2010

அம்பாந்தோட்டடை துறைமுகம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி திறக்கப்பட்ட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சீனாவின் முழமையான உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட துறைமுக கட்டுமானப் பணிகள் நிறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
02.09.2010

புற்றுநோய் எதிர்ப்பு நிதிக்காக கனடியத் தமிழ் சமூகம் பாரிய அளவில் கூடி ஸ்காபறோவின் மெட்றோபொலிட்டன் மையத்தில் இசைநிகழ்ச்சி ஒன்று நடாத்த ஏற்பாடாகி ...
02.09.2010

மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு திரும்பி வந்திருக்கி றேன் என்று கியூபாவின் முன்னாள் அதிபரும், முதுபெரும் கம்யூனிஸ தலைவருமான பிடல் காஸ்ட்ரோ (84) உணர்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என் உடல்நிலை கடுமையாகப்..
02.09.2010

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமராவ் மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து உரையாடி உள்ளார். இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தனிகர் அசோக்காந்தா உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகள்...
01.09.2010

கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா படையினர் மீண்டும் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதுடன் வீதிச்சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பல இடங்களிலும்
01.09.2010

விடுதலைப் புலிகள் பயன் படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது என இலங்கை இராணுவப் படை தெரிவித்துள்ளது.
01.09.2010

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து ஆயுதங்களை வாங்குவதற்கு உதவியதாக மூன்று ஈழத்தமிழர்கள் மீது ஜேர்மனியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கும் விஜிகணேந்திரா (வயது 35) மற்றும் ஜேர்மனியில் குடியுரிமை பெற்றவர்களான சசிதரன் (வயது 33), கோணேஸ்வரன் (வயது 39)
01.09.2010

சவூதி அரேபியாவில் வைத்து இலங்கை பணிப்பெண் ஆரியவதியின் உடலில் ஆணிகள் உட்செலுத்தி சித்திரவதைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
31.08.2010

தம்மைப் புலனாய்வுத்துறையினர் எனத் தெரிவித்து தங்க நகைகள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் எனவும் அதற்காகப் பொலிஸ் நிலையத்திற்கு நகைகளுடன் வருமாறு கூறி குடும்பஸ்தர் ஒருவரை அழைத்துச் சென்ற சிலர் ...
31.08.2010

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி எனப்படும் சிவனா சுப்பிரமணியத்தை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
31.08.2010

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு லெப்;. கேணல் தவம் நினைவாக 2வது தடவையாக நடாத்திய குறும்படவிழா 28.08.10 அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.
30.08.2010

வடபகுதி நோக்கி சுற்றுலாப் பயணிகளாகப் படையெடுத்து வருகின்றனர். தினமும் யாழ்.குடாநாட்டிற்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு வருவதாக யாழ் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
29.08.2010
இலங்கைத் தமிழ் அகதிகள் 492 பேரைக் கனடிய அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கனடிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான அணுகுமுறை மீது ஆத்திரம் கொண்டே இவர்கள் வன்கூவர் கலா பவனத்தில் ஒன்று கூடி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
28.08.2010
இலங்கையில் வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கி வீசாக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி இருக்காது எனக் குறிப்பிடப்படுகிறது.
28.08.2010

அரசியலமைப்பில் திருத்தம் செய்யும் சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்ட அரசியல் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது
28.08.2010

யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு மக்கள் பின்னடிப்பதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
27.08.2010

கனடாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய மூன்று தீவிரவாதிகளைப் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் மிஸ்பாகுதீன் அகமது (26) என்பவர் இந்தியாவை சேர்ந்தவர். மற்றொருவர் ஹைவா அலிஸாடேஹ்(30)...
(படங்கள் இணைப்பு)
27.08.2010

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்ற முன்னாள் புலிப் போராளிகளை எக்காரணம் கொண்டும் விரைவாகவோ உடனடியாகவோ விடுவிக்கக்கூடாது. அவ்வாறு அவர்களை விடுவித்தால் மீண்டும் பயங்கரவாத அமைப்பு ஒன்று உருவாவதற்கான அபாயம் உள்ளது....
27.08.2010

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்து வரை சென்றதில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்தார்....
27.08.2010

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மேலதிகமாக நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் நீல் பூனே தெரிவித்துள்ளார்.
27.08.2010

குடிவரவு தொடர்பான விவாதத்தின்போது தமிழ் அகதிகளின் கண்ணியம் தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என வான்கூவர் பேராயர் ஜே. மைக்கல் மில்லர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
27.08.2010

இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படவில்லை என பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
26.08.2010

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
26.08.2010

யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு நீதிபதி, எஸ் பரமராஜா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
26.08.2010

சீமான் தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது.
26.08.2010

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்களை தென்பகுதிக்கு அழைத்துச் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதாகக் கூறி ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலரால் இப்பெண்கள் அழைத்துச் செல்லப்படவிருந்தனர்.
மேலும்....