மகிந்தவின் நிபுணர் குழுவினர் ஐ.நா சபையின் அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தவுள்ளனராம்!
திகதி: 22.07.2010 // தமிழீழம்
ஸ்ரீலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங் கீமூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மகிந்தவின் நிபுணர் குழு ஐக்கிய நாடுகளின் சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்து வருகிறது என ஐ.நாவின் பேச்சாளர் மாட்டின் நெசக்கி ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்காவின் குழு நேற்று முன்தினம் தனது முதலாவது அமர்வை சடத்தியதாக தெரியவருகின்றது.

அத்துடன் மகிந்தவின் இந்த குழுவினரின் நிகழ்ச்சி நிரலின் படி, ஐக்கிய நாடுகளின் சிரேஸ்ட அதிகாரி விஜய் நம்பியார், உதவிச் செயலாளர்களான் ஜோன் ஹோம்ஸ், பெட்ரீசியா ஓப்ரைன் ஆகியோரை சந்தித்து தெளிவு படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படடுகின்றது.

அதன் பின்னர் மகிந்தவின் நிபுணர் குழு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறைச் செயலாளர் லீன் பெஸ்கோ, மனிதவுரிமைகள் அலுவலக ஆணையாளர் ரிச்சர்ட் பேனட் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.