இத்தாலி மக்களவை மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகளின் அனுசரணையுடன், இத்தாலி மேற்பிராந்திய இளையோர் அமைப்பு நடாத்திய ‘கலைச்சங்கமம் 2010' நிகழ்வு றெஜியோ எமிலியா நகரில் 18.07.10 ஞாயிற்றுக்கிழமை மாலை 1 மணியளவில் பொதுச் சுடரேற்றல்அகவணக்கத்துடன் இனிதே ஆரம்பமானது.
இத்தாலி அனைத்து பிரதேசத்திலிருந்தும் தமிழ்மக்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கலைநிகழ்வில் தமிழீழ தேசிய எழுச்சிப் பாடல்களிற்கான சிறந்த தனி பாடகர் தெரிவு, மேற்கத்தய திரையிசைப்பாடல்களிற்கான சிறந்த தனி,குழு நடன தெரிவு போன்ற விறுவிறுப்பான போட்டிகளும், வேறுபட்ட பல்சுவை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்விற்கு பிரான்சிலிருந்து ‘நையாண்டி' புகழ் மேடைக் கலைஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள். கீழ்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற போட்டியாளர்களிற்கான பரிசளிப்பு, ‘நையாண்டி'புகழ்மேடைக் கலைஞர்கள், ஒலி ஒளி அமைப்பு குழுவினர் கௌரவிப்பு, நன்றியுரையுடன் இரவு 8மணியளவில் இத்தாலி இளையோரமைப்பு நடாத்திய ‘கலைச்சங்கமம் 2010' இனிதே நிறைவுற்றது