மன்னாரில் நேற்று ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
திகதி: 23.07.2010 // தமிழீழம்
தலைமன்னர் வீதியில் உள்ள இராணுவமுகாமிற்கு அண்மையில் வைத்து நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைவானில் வந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் இராணுவத்தினரினதும், பொதுமக்களினதும் நடமாட்டங்கள் அதிகம் உள்ள நிலையிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பி. ஏ அன்ரனி மார்க் (வயது 67) என்ற ஊடகவியலாளரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் அவரிடம் இருந்த ஆவணங்களையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையில் இது தொடர்பில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

அன்ரனி மார்க் கொழும்பில் இருந்து இயங்கிவரும் டெய்லி மிரர், சன்டே ரைம்ஸ் ஆகிய ஊடகங்களின் ஊடகவியலாளராக பணியாற்றுவதுடன், மன்னார் சமாதான அமைப்பின் தலைவருமாவார்.