இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:
போரின் போது போக்குவரத்து தடைகளை காரணம் காட்டி வடபகுதி வைத்தியசாலைகளை திட்டமிட்டு புறக்கணித்துவந்த சிறிலங்கா அரசு தற்போதும் அவ்வாறே நடந்து வருகின்றது.
வடபகுதியின் மிகப்பெரும் வைத்தியாசாலையான யாழ் வைத்தியசாலையில் பல முக்கிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.
முதல் காலாண்டுக்கான மருந்துப் பொருட்களை சிறிலங்கா அரசு அனுப்புவதற்கு பின்னடித்து வருவதே இதற்கு காரணமாகும். எனினும் இன்னும் சில தினங்களில் மருந்துப்பொருட்கள் வந்து சேர்ந்துவிடும் என தாம் எதிர்பார்ப்பதாக யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.