கொழும்புச் சிறைக் கூடத்தில் தமிழ்க் கைதிகள் மூன்று பேர் காயமுற்றனர்!
திகதி: 25.07.2010 // தமிழீழம்
கொழும்பு விளக்கமறியல் கைதிகள் சிறைச்சாலையில் சக சிறைக் கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று தமிழ்க் கைதிகள் காயமடைந்தனர் என அறிய வந்தது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவ தாவது:

நேற்றுமுன்தினம் இரவு ஒரே சிறைக் கூடத்துக்குள் தமிழ்க் கைதிகளுடன் ஏனைய கைதிகளும் ஒன்றாக இருக்க அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தமிழ்க் கைதிகள் நேற்று சிறைச்சாலை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தனர். இவ்வாறு முறைப்பாடு செய்தததால் ஆத்திரம்கொண்ட சக கைதிகளும் சிறைச்சாலை காவலர்களும் நேர்ந்து நேற்றுக்காலை கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த மூன்று தமிழ்க் கைதிகளையும் தாக்கினராம்.

இந்தச் சம்பவம் குறித்து கைதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். பிரதம சிறைச்சாலை அதிகாரியுடன் தொடர்புகொண்ட விநாயகமூர்த்தி தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். நாளை மறுதினம் திங்கட்கிழமை இது தொடர்பாக விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்படும்என்று உறுதியளிக்கப் பட்டுள்ளது.