சிவந்தனின் நடைபயணத்திற்கு நாம் தமிழர் வாழ்த்து
திகதி: 27.07.2010,
என் இதயத்துக்கு இனிப்பான என் தாய் தமிழ் உறவுகளே ,நம் தேச விடுதலைக்காக நம் மண்ணில் விதையான எண்ணற்ற மாவீரர்களின் கனவு ஈழ விடுதலை ஒன்றே ,
அக்னி குண்டுகள் மழையாய் பொலிந்த போதும் நம் மண்ணின் விடுதலைக்காக முள்ளிவாய்க்காலில் தங்களின் உயிரை தந்தவர்களின் கனவு ஈழ விடுதலை ஒன்றே ,நம் இனத்தின் மேல் கொலை வெறி கோரதாண்டவம் நடத்திய இனவெறி அரசிடமிருந்து மக்களை காப்பாற்ற கருவி ஏந்திய நம் தேசிய தலைவனின் கனவு ஈழ விடுதலை ஒன்றே ,
இருபதுக்கும் மேலான நாடுகளின் துணையோடு எம் இனத்தை இலங்கை அரசு அழித்த போதும் போராடி சாவதே தமிழனின் மாண்பு என்று களத்தில் நின்ற போராளிகளின் கனவு ஈழதேசம் ஒன்றே ,
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் மண்ணின் விடுதலைக்காக இன்றும் போராடுபவர்களின் கனவு ஈழதேசம் ஒன்றே ,அந்த வகையில் ஈழ விடுதலைக்காக மேற்கொள்ளும் சிவந்தனின் முயற்சிக்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு ,
சிவந்தன் நடந்து வரும் பாதை எங்கும் தமிழர்கள் திரண்டு நின்று அவரோடு நம் விடுதலைக்கு தோள் கொடுக்குமாறு ,அடக்குமுறை சட்டத்தால் சிறையில் இருக்கும் அண்ணன் சீமானின் சார்பாக கேட்டுகொள்கிறோம்
நாம் தமிழர்