திகதி: 27.07.2010,
வவுனியா பிரதேசத்தில் பரவலாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் ஒரு நாள் அடையாள கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவர் பின்னர் கப்பமாகப் பணம் பெற்றுக் கொண்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் வவுனியா நகரப் பகுதியில் பரபரப்பையும் வர்த்தகர்கள் மத்தியில் அச்சத்துடன் கூடிய பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலிலேயே வவுனியா வர்த்தகர் சங்கம் கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்துள்ளது.