முன்னாள் இராணுவப் பெண்ணொருவரை கற்பழித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்

திகதி: 28.07.2010,

முறைப்பாடு ஒன்றைத் தெரிவிப்பதற்காக புத்தல பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இராணுவத்தை விட்டுத் தப்பியோடிய பெண்ணை பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கற்பழித்ததாக 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இராணுவத்தை விட்டு தப்பியோடிய குறித்த பெண் தனது காதலனுடன் வசித்து வந்ததாகவும் தான் கர்ப்பம் முற்று இருப்பதாக அறிவித்ததும் கர்ப்பத்தைக் கலைத்து விடும்படி தனது காதலன் வற்புறுத்தியதாகவும் இதைத் தொடர்ந்து இது குறித்து புகாரினைத் தெரிவிக்க தான் பொலிஸ் நிலையம் சென்றிருந்த வேளையில் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த மூன்று உத்தியோகஸ்தர்கள் தன்னை கற்பழித்ததாகவும் 3 நாட்கள் கழித்து இராணுவத்தில் இருந்து தப்பியோடியதாக குற்றம் சாட்டி தன்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதாகவும் இந்தப் பெண் தன்னுடைய வாக்கு மூலத்தில் தெரிவித்து இருக்கிறார்.