திகதி: 28.07.2010,
இலங்கை அகதிகள் 219 பேருடன் கன டாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தாய்லாந்து சரக்குக் கப்பலான "எம்.வீ. சன்.சீ.', கனேடிய கடற்பரப்பை அடைவ தற்கு முன் அமெரிக்க அல்லது கனேடிய கடலோர காவற்படையினரால் சுற்றிவளைக் கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரு நாடுகளின் அதிகாரிகளும் கப்பலை மிகவும் உன்னிப்பாக அவதா னித்துக்கொண்டு இருக்கின்றனர் என்று வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இந்தக் கப்பல் குறித்த தகவல்களை வெளியிடக்கூடாது என்ற உத்தரவுக்கு இணங்க, இது தொடர்பில் தகவல் வழங்க முடியாதுள்ளது என்று அமெரிக்க கடற்றுறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை குறித்த கப்பல் தாய்லாந்துக் கொடியுடன் பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகம் நோக்கி வருகின்றமையை அமெரிக்க கடற்றுறை அதிகாரி எடம் ஸ்டன்டொன் உறுதிப்படுத்தியிருந்தார்.