அன்பார்ந்த சங்கதி வாசகர்களுக்கு,
கடந்த காலங்களில் சங்கதி இணையத்தள குழுமத்தில் பணிபுரிந்த சிலர்; அவர்களது தவறான செயற்பாடுகளினால் சங்கதி குழுமத்திலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ தேசியத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் சங்கதி இணையத்தளத்தை எதிரிகளின் விருப்பத்திற்கேற்ப சிதைப்பதற்காக இப்போது இவர்கள் தவறானவர்களுடன் கைகோர்த்து சங்கதி இணையத்தளத்தை ஒத்த வடிவமைப்பைக் கொண்டு புதிய தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிகின்றோம். இதனால் எமது வாசகர்கள் எதுவித குழப்பமும் அடையவேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, எத்தனை இடர்கள் வரினும் அத்தனையும் தகர்த்தெறிந்து தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடும்போம்.
தாயக விடுதலைக்கு பலம் சேர்ப்பதற்காக எங்களால் ஆரம்பிக்கப்பட்ட சங்கதி இணையத் தளம் ஒரு சில தனி நபர்களின் தவறான செயற்பாடு காரணமாக கடந்த 18.05.2009ம் நாளுக்கு பின் தனிநபர்களையும் தேசிய கட்டமைப்புகளையும் விமர்சித்ததனூடாக தேசியத்தின் ஒற்றுமையை தொடர்ந்து பாதித்து கொண்டு இருந்ததால் தற்போது நாங்கள்; எங்களது பொறுப்பில் அதை திரும்பப் பெற்றுகொண்டுள்ளோம்.
இனி வருங்காலத்தில் தமிழ்மக்களின் ஒற்றுமையை குலைக்கின்ற விதத்தில் சங்கதி இணையத்தளம் செயற்படாது என்பதுடன் 18.05.2009 முன் எப்படி தேசியத்திற்கு பலம் சேர்த்து, எதிரிக்கு எதிராக செயல்பட்டதோ அதேபோன்று தொடந்து செயல்படும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
சங்கதி நிர்வாகம்
தமிழீழம்
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'