புளியம்பொக்கணையில் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு; அந்தப் பிரதேச மக்கள் பெரும் அச்ச நிலையில்! கட்டளைத் தளபதியிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு
புளியம்பொக்கணை, கலவெட்டித்திடல், நாகேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் உத்தியோ கப்பற்றற்ற ஊரடங் குச் சட்டம் அமுல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந் தப் பிரதேச மக்கள் இராணுவ அச்சுறுத்தலால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். இதற்கு உடனடித் தீர்வுகாண வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மேற் கண்டவாறு கோரிக்கை முன்வைத்துள் ளார்.
கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் இராஜகுருவுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற சந்திப்பிலேயே இக்கோரிக்கையை அவர் முன்வைத்தார்.
* சாந்தபுரம் பிரதேச மக்கள் அவர் களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர அனுமதிக்காததால் பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்களை மீளக் குடியமர அனும திக்க வேண்டும்.
* செட்டிகுளம் நலன்புரி நிலை யத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட மயில்வாகனபுரம், குமாரசாமிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி 12 ஆம் கட்டை, பிரமந்தனாறுப் பகுதிகளில் தரப்பாள்களின் கீழ் வாழ்கின்றனர். அவர் களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்.
* வன்னேரிக்குளம், கண்ணகைபுரம் பகுதிகளில் இருந்து இராணுவத் தேவைக் காக குடிதண்ணீர் எடுத்துச் செல்லப்படு வதால், அப்பகுதி மக்கள் தமது வயல் களுக்கு பகலில் நீர்ப்பாய்ச்ச முடியாத நிலை காணப்படுகின்றது. இதற்கு தீர்வு காணவேண்டும்.
* கிளிநொச்சி மாவட்டமக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண் டும். மக்களின் போக்குவரத்துக்கு சைக் கிள்கள் வழங்கவேண்டும்.்
* மக்களால் கைவிடப்பட்ட சொத்துக் களை மீளப் பெற ஏற்பாடு செய்ய வேண் டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வைக் காண நடவடிக்கை எடுப்பதாகக் கட்ட ளைத் தளபதி உறுதி அளித்தார்.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பொன் காந் தன், ஆசிரியர் சச்சிதானந்தன், 57 ஆவது படையணித் தளபதி கேணல் ஜினேந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.