பிரான்சில் கறுப்பு யூலை கண்டனப் பேரணி
திகதி: 26.07.2010,
1983 கறுப்பு யூலை 23 இல் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறியர்களால் நடாத்தப்பட்ட இனவழிப்பு நடைபெற்று 27ஆண்டுகள் நினைவை முன்னிட்டு இன்று (25.07.2010) ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் றிபப்ளிக்கில் இருந்து மாலை 3மணிக்கு ஆரம்பமானது.

தொடந்து றிபப்ளிக்கில் இருந்து பேரணி அமைதியான முறையில் நகர்ந்து மாலை 5 மணிக்கு பஸ்ரில் நினைவுச் சதுக்கத்தை சென்றடைந்தது.

அங்கு அகவணக்கத்தை தொடந்து விசேடமாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றது.

பிரான்ஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நினைவுரைகளை ஆற்றினார்கள் மாலை 6 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் சுமார் ஆயிரம் வரையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.