இடம்பெயர்ந்த மக்களை சந்திக்க சிங்கள கட்சிகளுக்கு ஸ்ரீலங்கா தடை
திகதி: 27.07.2010,

வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்களையும், மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களையும் சந்திப்பதற்கான உரிமை எதிர்கட்சிகளுக்கு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


ஜே வி பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் இந்த உரிமை அபகரிக்கப்பட்டுள்ளதாக அவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

வடக்கின் வசந்ததத்தின் உண்மைகள் அம்பலமடைந்துவிடும் என்பதற்காகவே இடம்பெயர்ந்த மக்களை சந்திக்க எதிர்கட்சிகள் அனுமதிக்கப்படுவதில்லை என பிமல் ரத்நாக குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை, அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல மறுத்துள்ளார்.