யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தமது பிறந்தநாள் வைவத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய வேளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் அவர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதால் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் ஆரியகுளத்தடியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் வருட மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 25) மற்றும் சுண்டுக்குளியைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனான கலிஸ்ரஸ் கஜேந்திரன் (வயது 25) ஆகியோராவர்.இம்மாணவர்கள் இருவரின் சடலங்களும் மரண விசாரணைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.