Sanskathi

ஜப்பான் உயர்மட்ட தூதுக்குழு - ஜனாதிபதி சந்திப்பு

இலங்கையில் ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜப்பான் உயர்மட்ட தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜப்பான் இலங்கைக்கு உண்மையான நண்பனாக தொடர்ச்சியாக உதவி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று தூதுக்குழுவின் தலைவர் சர்வதேச கூட்டுறவு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் உதவி அமைச்சர் Kazuya Nashida  ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.


ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் அழைப்பை வழங்கினார்.

 

இத்தூதுக்குழுவில் ஜப்பானியத் தூதுவர் Kenichi Suganuma மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.

 

இந்சந்திப்பில் வெளிவிவகாரச் செயலாளர் பிரசாத் காரியவசம் கலந்துகொண்டார்.