Sanskathi
Nov 10

ரெய்டில் உள்நோக்கம் : ஜெ.தீபா குற்றச்சாட்டு

ரெய்டில் உள்நோக்கம் : ஜெ.தீபா குற்றச்சாட்டு

 ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

எனவே நேற்று இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மலர்தூவி வணங்கினார் பின்னர், ஜெ.தீபா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசுக்கும் இந்த ரெய்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது ரெய்டு நடக்கவில்லை. 

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மட்டும் தான் ரெய்டு. அரசியல் மாற்றங்கள் ஏற்படும் சூழலில் இந்த ரெய்டு நடத்துவதால் மத்திய அரசு ஆதாயம் அடைய பார்ப்பதாக தெரிகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளும்கட்சி நிவாரண உதவி, பாதுகாப்பு நடவடிக்கை என்று எதுவும் எடுக்கவில்லை என்றார்.

மாவீரர்கள்