Sanskathi

2-வது நாளாக ரெய்டு: சசிகலா உறவினர்களின் 317 வாங்கி கணக்குகள் ஆய்வு

வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் 2-வது நாளாக சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதனை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட இடங்களில் 1800 அதிகாரிகள் அதிரடி சோதனையை மேகொண்டனர்.

இந்நிலையில், இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்களின் 317 வங்கி கணக்குகளை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் அவர்களின் வங்கி லாக்கர்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.