Sanskathi

இந்தியா செல்கிறார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்தின்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தை எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளமை மற்றும் எட்கா உடன்படிக்கை குறித்த பேச்சுகளை இறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது