Sanskathi

தேர்தலுக்குத் தயாராகிறது சிறிலங்கா சுதந்திரக்கட்சி

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கு, அமைப்பாளர்களைத் தெளிவூட்டும் வேலைத்திட்டத்தை சிறிலங்கா சுதந்திர கட்சி முன்னெடுக்கவுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் , போட்டியிடுவதற்கு ஆர்வமுடைவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

கட்சியின் தலைமையகத்தில் இந்தத் தெளிவூட்டும் வேலைத்திட்டம் நடைபெறும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுவின் மூத்த உறுப்பினர்கள் அதற்கான தயார்ப்படுத்தலில் உள்ளனர் என்றும் கட்சி தெரிவித்துள்ளது.