Sanskathi

மைத்­திரி- மகிந்த விரை­வில் சந்­திப்பு

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வுக்­கும், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும் இடை­யில் அவ­சர சந்­திப்­பொன்று நடை­பெற ஏற்­பா­டா­கி­யுள்ளது.

முக்­கி­ய­மான அர­சி­யல் விட­யங்­கள் குறித்து மகிந்­த­வும், மைத்­தி­ரி­யும் நேர­டி­யா­கச் சந்­தித்து பேசு­வது நல்­ல­தென மகிந்த அணி முக்­கிய உறுப்­பி­னர்­க­ளும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளும் பரஸ்­ப­ரம் தீர்­மா­ன­ மொன்றை எடுத்­ததை அடுத்தே இரு­வ­ரும் நேரில் சந்­தித்­துப் பேசு­வ­தென முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக மேற்­படி இரு தலை­வர்­க­ளும் நேருக்கு நேர் சந்­திப்­ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்ய அமைச்­சர்­க­ளான நிமல் சிறி­பால டி சில்வா, டிலான் பெரேரா, பிரதி அமைச்­சர் லசந்த அழ­கி­ய­வண்ண ஆகி­யோர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி சார்­பி­லும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சீ.பி.ரத்­நா­யக்க, மகிந்­தா­னந்த அழுத்­க­மகே ஆகி­யோர் மகிந்த அணி சார்­பி­லும் பல சுற்­றுப் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்­த­னர்.

அத­னை­ய­டுத்தே இந்த நேர­டிச் சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சந்­திப்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச ஆகிய இரு­வர் மட்­டுமே கலந்­து­கொள்­வ­தென இரு தரப்­பி­லும் பரஸ்­பர உடன்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது என்று அறி­ய­மு­டி­கின்­றது .

அர­சுக்­குள் தனக்கு எதி­ராக சதி முயற்­சி­கள் நடப்­ப­தாக சில தினங்­க­ளுக்கு முன்­னர் அரச தலை­வர் மைத்­திரி பகி­ரங்­க­மா­கக் கூறி­யி­ருந்த நிலை­யில் இந்­தச் சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது.