Sanskathi

ஆசியன் மாநாட்டுக்கு இடையே ஜப்பான், ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளின் பிரதமருடன் மோடி சந்திப்பு

ஆசியான் நாடுகளின் 50–வது ஆண்டு சிறப்பு விழா, ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடக்கிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிலிப்பைன்ஸ் சென்றார்.

மணிலாவில் 3 நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை நேற்று சந்தித்தார். இந்த நிலையில், மாநாட்டுக்கு இடயே,  ஆஸ்திரேலிய பிரதமர் மால்கல்ம் டர்ன்புல், வியட்நாம் பிரதமர்  நியான் ஸூவான் ஃபுக், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்தார்.ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்பின் போது, இரு தரப்பு  நலன்கள் இந்தோ- பசுபிக் தொடர்பான விவகாரங்கள் ஆகியவை குறித்து மோடி ஆலோசித்ததாக  கூறப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து வியட்நாம் பிரதமரை மோடி சந்தித்த போது, இரு நாடுகளுக்கு இடையேயான பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்கள் விரிவாக ஆலோசித்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.