Sanskathi

பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம்தான்: கமல்

பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம் தான், மதம் கடந்து மக்களைக் காப்போம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்வீட்டர் பக்கத்தில் அவர் ட்வீட் செய்துள்ளதாவது:

''அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும் தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்'' எனக் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்ததால் அவரை பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கமல்ஹாசன் சமீப காலமாக எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்களை முக்கியமாக பாஜகவை கடுமையாக எதிர்க்கும் முதல்வர்களை சந்தித்துப் பேசிவருகிறார்.

கேரளாவில் ஆளும் இடதுசாரி முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.