Sanskathi
Nov 19

காலியில் ஊரடங்குச் சட்டம் நீக்கம்: பாதுகாப்புக்காக இராணுவம், எஸ்.டி.எப்

காலியில் ஊரடங்குச் சட்டம் நீக்கம்: பாதுகாப்புக்காக இராணுவம், எஸ்.டி.எப்

காலி பொலிஸ் பிரிவின் ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 

வெலிபிடிமோதர, மஹபுகல, ரக்வத்தை, கிங்தொட கிழக்கு, கிங்தொட மேற்கு, பியதிகம மற்றும் குருந்துவத்தை ஆகிய கிராம சேவர் பிரிவுகளில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

எதுஎவ்வாறு இருப்பினும், அந்தப் பகுதிகளில் பொலிஸாருடன் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, அப் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 19 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர்கள்