Sanskathi
Nov 19

தேசிய கொடியை ஏற்ற மறுத்த சம்பவம் - சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ள வடக்கு ஆளுநர்!

தேசிய கொடியை ஏற்ற மறுத்த சம்பவம் - சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ள வடக்கு ஆளுநர்!

வவுனியாவில் வைத்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்றுவதை நிராகரித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் எமது செய்திச் சேவைக்கு கருத்து பரிமாறிக்கொண்டபோது இதனை குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து அனைத்து தரப்பினராலும் கேள்வியெழுப்பப்படுகின்ற நிலையில், அது குறித்த சட்ட ரீதியான அணுகுமுறைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நேரில் சென்று ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்கள்