Sanskathi

சிந்தனைகள்

திலீபனின் தியாகம் இந்திய...

திலீபனின் தியாகம் இந்திய...

அன்னை பூபதி தனிமனிதப்...

அன்னை பூபதி தனிமனிதப்...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

சிந்தனைகள்

திலீபனின் தியாகம்...
அன்னை பூபதி தனிமனிதப்...
கேணல் கிட்டு ஒரு...
விழிப்புத்தான்...
விடுதலைப் போராட்டம்...
எனது மக்கள் பற்றியும்...

இலங்கை

படகு வழியாக...
அனைத்து உள்ளுராட்சி...
இன்று நள்ளிரவில்...
முன்னாள் போராளிகளை...
கூட்­ட­மைப்­பின்...
கேப்பாபிலவில்...

வீடியோ

கனடாவில் நடைபெற்ற...
பிரபாகரனின் கதை
பிரபாகரன் காலம் தந்த...
தலைவர் பிறந்தநாள்...
அன்னை தமிழ் ஈழ மண்ணே...
உலக விஞ்ஞானிகளை...

பாமினி to யுனிகோட்
இந்தியா க்ளிக்ஸ்
வெப் டுனியா
மாலைமலர்
தினமலர்
மாலைச்சுடர்
தினமணி
தினபூமி
விடுதலை
ஈழமுரசு
இந்திய செய்திகள்
உலக செய்திகள்
ஐரோப்பா செய்திகள்
ஐரோப்பா
Add Add
Nov 20

தேசியக் கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன?

தேசியக் கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன?

தேசிய கொடியை தூக்க மறுத்த வட மாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த அமைச்சர் தேசிய கொடியை தூக்கவில்லை என்பதில் குறை காணும் தென்னிலங்கை தீவிரவாதிகள், அன்று தேசியக் கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு காட்டிய நல்லெண்ணம் என்ன?

தமிழ் அரசியலில் இருக்கின்ற முற்போக்காளர்களை பலமடைய வைக்க சிங்கள அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் தவறிவிட்டன. இப்போதும்கூட சம்பந்தனை வெறுங்கையுடன் ஒன்றும் தராமல் ஓட்டிவிடத்தானே நீங்கள் முயல்கிறீர்கள்?

ஒரே நாடு என்ற அடையாளத்துக்குள் வந்துவிட்ட சம்பந்தனை பலவீனப்படுத்தினால், வடக்கில் தீவிரவாதம் பலமடைவதை எவராலும் தடுக்க முடியாது. ஆகவே இன்று வடக்கில் ஒரு தமிழ் கல்வி அமைச்சர் தேசிய கொடியை தூக்க மறுத்ததற்கு தென்னிலங்கை தீவிரவாதிகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மத்திய கொழும்பு இந்து வித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையின் போது ஊடகவியலாளர்களுக்கு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,

இந்த தேசியகொடி உட்பட்ட அரசியலமைப்புக்கு விசுவாசமாக நடப்பேன் என்று உறுதிமொழி அளித்து விட்டுத்தான், அனைத்து பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அதுதான் சட்டம். இப்படி தேர்தலில் வெற்றி பெற்று வந்துவிட்டு, அமைச்சர் பதவியையும் பெற்றுவிட்டு இப்போது கொடியை தூக்க மாட்டேன் என்பது முரண்பாடானதாகும்.

எனினும் இத்தகைய முரண்பாடான ஒரு நிலைமை வடக்கில் இன்று உருவானதற்கு தெற்கின் சிங்கள தீவிரவாத அரசியல்வாதிகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எல்லாவற்றையும்ம் வடக்கின் மீது, தமிழர் மீது சாட்டிவிட்டு தப்பிக்கொள்ள முடியாது.

மாவீரர்கள்