Sanskathi
Nov 21

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளுக்கு விளக்கம்

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளுக்கு விளக்கம்

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் பிழையாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பிரசாரங்களை தெளிவுப்படுத்தியுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பழனிதிகாம்பரமும், தாமும் நேற்று தமிழகத்துக்கு சென்று தமிழக தலைவர்களை சந்தித்து இந்த விடயம் குறித்து தெளிவுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் அடிப்படையற்ற பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.குறித்த பெயர் மாற்றத்துக்கு தமிழ் நாட்டைச்சேர்ந்த முக்கிய அரசியல் வாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் அவதானத்துக்கும் கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் இந்தவிடயம் குறித்து தமிழக அரசியல்வாதிகளுக்கு உரிய தெளிவு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்கள்