Sanskathi

சிந்தனைகள்

திலீபனின் தியாகம் இந்திய...

திலீபனின் தியாகம் இந்திய...

அன்னை பூபதி தனிமனிதப்...

அன்னை பூபதி தனிமனிதப்...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

சிந்தனைகள்

திலீபனின் தியாகம்...
அன்னை பூபதி தனிமனிதப்...
கேணல் கிட்டு ஒரு...
விழிப்புத்தான்...
விடுதலைப் போராட்டம்...
எனது மக்கள் பற்றியும்...

இலங்கை

அனைத்து உள்ளுராட்சி...
இன்று நள்ளிரவில்...
முன்னாள் போராளிகளை...
கூட்­ட­மைப்­பின்...
கேப்பாபிலவில்...
நாமலும், பிரசன்னவுமே...

வீடியோ

கனடாவில் நடைபெற்ற...
பிரபாகரனின் கதை
பிரபாகரன் காலம் தந்த...
தலைவர் பிறந்தநாள்...
அன்னை தமிழ் ஈழ மண்ணே...
உலக விஞ்ஞானிகளை...

பாமினி to யுனிகோட்
இந்தியா க்ளிக்ஸ்
வெப் டுனியா
மாலைமலர்
தினமலர்
மாலைச்சுடர்
தினமணி
தினபூமி
விடுதலை
ஈழமுரசு
இந்திய செய்திகள்
உலக செய்திகள்
ஐரோப்பா செய்திகள்
ஐரோப்பா
Add Add
Dec 04

தென்கொரியா மீனவர்களின் படகு எரிபொருள்நிரப்பும் கப்பல் மீது மோதி விபத்து

தென்கொரியா மீனவர்களின் படகு எரிபொருள்நிரப்பும் கப்பல் மீது மோதி விபத்து

தென்கொரியாவின் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த எரிபொருள் நிரப்பும் கப்பல் மீது மீனவர்களின் படகு எதிர்பாராத விதமாக மோதியதில் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியுள்ளது.குறித்த படகில் 2 மாலுமிகள் உள்பட 22 பேர் சென்று இருந்தார்கள்.


இந்த சம்பவம் குறித்து உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


தென்கொரியா மீனவர்களின் படகு எரிபொருள்நிரப்பும் கப்பல் மீது மோதி விபத்து


13 பேர் பலியாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.


மேலும் 2 பேர் மாயமாகி உள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


கடற்படைக்கு சொந்தமான 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் 19 கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாவீரர்கள்