Sanskathi
Dec 06

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப்பின் அத்துமீறலை சகித்துகொள்ள முடியாது: ஈரான் ஆவேசம்

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப்பின் அத்துமீறலை சகித்துகொள்ள முடியாது: ஈரான் ஆவேசம்

கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

இதற்கிடையே, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை (அமெரிக்க நேரப்படி) இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அவர் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அத்துமீறலை சகித்துகொள்ள முடியாது என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அரசு உயரதிகாரிகள் கூட்டத்தில் இன்று உரையாற்றிய ரவுஹானி இஸ்லாமிய புனிததலங்கள் தொடர்பாக நடைபெறும் அத்துமீறல்களை ஈரான் சகித்து கொள்ளாது. இந்த சதி திட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

முன்னாள் போராளியை நாடுகடத்தாதே! மெல்பேர்ணில் கவனயீர்ப்புப்போராட்டம்! முன்னாள் போராளியை நாடுகடத்தாதே! மெல்பேர்ணில் கவனயீர்ப்புப்போராட்டம்!...
வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்...
ஈகையர் வணக்க நிகழ்வு ஈகையர் வணக்க நிகழ்வு...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால்... நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால்......
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு...
பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்! பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்!...
தமிழின அழிப்பு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி பேரணி...