Sanskathi
Dec 07

ஆர்.கே நகரில் முறையாக தேர்தல் நடந்தால் திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: சேலத்தில் முத்தரசன்

ஆர்.கே நகரில் முறையாக தேர்தல் நடந்தால் திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: சேலத்தில் முத்தரசன்

ஆர்.கே. நகரில் ஜனநாயக முறையில் முறையாக தேர்தல் நடந்தால்  திமுக வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவருடைய சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாள் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரணப்பணிகளை அளிப்பதில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை. குமரி மாவட்டத்தை புயல் பாதித்த மாவட்டமாக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும். 

குமரி பாதிப்பு குறித்து ஊடகங்கள் அளித்த தகவல் அடிப்படையில் கூட, அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது. கடந்த சில மாதங்களாக, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர். சுயாட்சி அதிகாரத்துடன், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். விஷால் மனு நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே மாநில அரசு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. ஆர்கே நகர் தொகுதியில், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் திமுக வெற்றி பெறும். நாளை(இன்று) முதல் அங்கு பிரசாரம் மேற்கொள்கிறேன். திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.