Sanskathi
Dec 07

தமிழ்க் கட்சிகள் பிரதமர் ரணிலுடன் இரண்டாவது சுற்றுப் பேச்சு

தமிழ்க் கட்சிகள் பிரதமர் ரணிலுடன் இரண்டாவது சுற்றுப் பேச்சு

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் சில கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மற்றுமொரு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளன.


இதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்துகொள்கின்றன.


இந்த சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாத முதல்வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில் தேர்தலில் கூட்டணியிட்டு போட்டியிடுவது மற்றும் தனித்தனியாக போட்டியிடுவது பற்றிய பலதரப்பு பேச்சுக்கள் தென்னிலங்கையில் இடம்பெற்று வருகின்றன.


இந்த நிலையில் இவ்விவகாரம் பற்றி தமிழ்க் கட்சிகள் பிரதமருடன் ஏற்கனவே இருதடவைகள் சந்திப்பை நடத்தியிருந்த நிலையில் இன்றைய தினமும் பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.