Sanskathi
Dec 07

முன்னாள் போராளி பிறையாளன் உயிரிழந்தார் !

முன்னாள் போராளி பிறையாளன் உயிரிழந்தார் !

பிறையாளன் என்று அழைக்கப்படும்,  வவுனியா மாமடு, சேனைப்பிலவைச்  சேர்ந்த  முன்னாள் போராளி ஒருவர் கடந்த செவ்வாயன்று(05.12.207)  உயிரிழந்துள்ளார்.


முன்னாள்   போராளி   பிறையாளன்       உயிரிழந்தார் !


விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் கோட்டப் பொறுப்பாளராக செயற்பட்ட இவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு, முல்லைத்தீவு - மாஞ்சோலை  வைத்தியசாலையில் கடந்த ஆறு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில்,  திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


42 வயதுடைய பிறையாளனின்  இயற்பெயர்,   இரத்தினசிங்கம் ஆனந்தராசா என்பது குறிப்பிடத்தக்கது.