Sanskathi
Dec 29

மக்களின் அரசியல் அற வலிமையினை வெளிப்படுத்திய கத்தலோனியா

மக்களின் அரசியல் அற வலிமையினை வெளிப்படுத்திய கத்தலோனியா

வலிமை கொண்ட ஒரு அரசினை, தமது அரசியல் அற வலிமை கொண்டு கத்தலோனிய மக்கள் மீண்டும் ஒரு தடவைஎதிர்கொண்டு வென்றுள்ளார்கள்.கத்தலோனியா !

ஸ்பெயினின் ஆளுகைக்கு அல்லது ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு தேசம்.

இத்தேசத்தின் மீது ஸபெயின் அரசு திணித்திருந்த பிராந்திய அரசவைக்கான தேர்தலில், கத்தலோனியாவைதனிநாடாக கோரும் தரப்புக்கள், பெரும்பான்மை இடத்தினைப் பிடித்து தமது அரசியல் நிலைப்பாட்டை மீண்டும்ஒரு தடவை உரக்க முரசறைந்துள்ளன.

அப்பிராந்திய மக்கள் மீண்டும் மீண்டும் தமது வாக்குகள் மூலம்,தமது அரசியல் விருப்பினை, ஸ்பெயின் மத்திய அரசுக்கும், உலக அரசுகளுக்கும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

அப்பிராந்திய மக்களுக்கு தற்போது கையில் உள்ள அமைதிவழி ஆயுதம் வாக்கு சிட்டைகளாவே உள்ளன. இதுவேஅவர்களது ஜனநாயக உரிமையின் கருவியாகவும் உள்ளது.

முன்னராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தனிநாட்டை வலியுறுத்தும் வகையில் இப்பிராந்தியத்தில்இடம்பெற்றிருந்த பொதுவாக்கெடுப்பின் முடிவுகள் தனிநாட்டுக்கான மக்கள் ஆணையினை வழங்கியிருந்தது. இதனைஸ்பெயின் மத்திய அரசு மட்டுமல்ல பல உலக அரசுகளும் நிராகரித்திருந்தன.

இது ஸ்பெயின் என்ற தேச ஒற்றுமைப்பாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது என ஸ்பெயினின் மத்தியஅரசு அன்று கூறியிருந்ததோடு, பொதுவாக்கெடுப்பினை நடாத்தியிருந்த கத்தலோனியாவின் பிராந்தியஅரசவையையும் கலைத்திருந்தது.

பின்னர் புதிய பிராந்திய அரசினை அமைக்கும் பொருட்டு புதிய தேர்தல் ஒன்றினையும் ஸ்பெயின் அரசுஅறிவித்திருந்தது. அதற்கான தேர்தலே கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. ஒருவகையில் இது கத்தலோனியா மக்கள்மீது ஸ்பெயின் அரசு திணித்த ஒரு தேர்தல் எனலாம்.

இத்தேர்தல் களத்தில் கத்தலோனியாவை தனிநாடாக வலியுறுத்தும் அரசியல் தரப்புக்களும், ஒன்றுபட்ட ஸ்பெயினைவலியுறுத்தும் தரப்புக்களும் களங் கண்டிருந்தன.

தனிநாட்டை வலியுறுத்தியிருந்த பொதுவாக்கெடுப்பினை நிராகரித்த ஸ்பெயின் அரசு அது போலியானது எனவும்மக்களின் உண்மையான விருப்பம் ஒன்றுபட்ட ஸ்பெயினே என்றும் வாதிட்டிருந்தது.

இந்த வாதங்களுடன் அதனை நோக்கிய எதிர்பார்புடன் காத்திருந்த ஸ்பெயின் அரசுக்கு பேரிடியாக நடந்து முடிந்ததேர்தலின் முடிவுகளில், மொத்தம் 135 ஆசனங்களில் 70 இடங்களை தனிநாட்டடை வலியுறுத்தும் தரப்பு அதிபெரும்பான்மை இடத்தினை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தேர்தலின் முடிவுகள் ஸ்பெயினின் மத்திய அரசுக்கு மட்டுமல்ல பல உலக நாடுகளுக்கும் பேரிடியினைக்கொடுத்துள்ளது.

தனிநாட்டையோ அல்லது அதிக அதிகார பகிர்வை கோரும்

தற்போது நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பல ஐரோப்பிய நாடுகளுக்குள் உள்ள பல பிராந்தியங்கள் தமதுஅதிக அதிகாரத்தினையும், தனிநாட்டுக்கான விருப்பினையும் இன்னமும் உயிர்புடன் வைத்திருக்கின்றன.

இந்நிலையில் கத்தலோனி மக்கள் இந்த அரசியல் நிலைப்பாடும் உறுதிப்பாடும், இப்பிராந்தியங்களில்கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் இந்த வல்லாதிக்க சக்திகளுக்கு உண்டு.சிறிலங்காவுக்கும் இந்த அச்சம் உண்டு.

குறிப்பாக இப்பிராந்திய மக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது தமது அரசியல் விருப்பையேவெளிக்காட்டுவதற்கு வாக்குகளைத்தான் தற்காலத்தில் பயன்படுத்தி வருகின்றனர். பல பிராந்தியங்களில் ஆயுதவழிப் போராட்டங்கள் முன்னர் இடம்பெற்றிருந்ததும், அவைகள் அந்த நாடுகளின் அரசுகளால் நசுக்கப்பட்டதும்பழைகதை.

அக்கதை மீளவும் தொடங்கிவிடக் கூடாது என்ற நிலையில்தான் அப்பிராந்திய மக்களுக்கான ஒரு ஜனநாயகவெளியினை இந்த நாட்டு அரசுகள் பெயரளவில் வழங்கி வருகின்றன.

மக்களும் தமக்கு கிடைக்கின்ற ஜனநாயக வெளியில் தமது அரசியல் நிலைப்பாட்டை 'வாக்குகள்' மூலம் வெளிக்காட்டிவருகின்றனர். ஆனால் பெரும்பாலான அரசுகள் எதுவும் அம்மக்களின முடிவுகளை எளிதில் ஏற்று கொள்வதில்லை.

ஏன்எனில் தங்களை ஜனநாயவாதிகள் அல்லது ஜனாநாயக அரசுகள் எனக் காட்டிக் கொள்ளும் இவர்கள், தமது நலன்களுக்குஏற்றவகையில் ஜனநாயகத்தினை வியாக்கியானப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்த வியாக்கியான வேறுபாட்டை பலஸ்தீன விவகாரத்தின் ஊடாக நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.தேர்தல் மூலம் மேற்கு கரையில் தேர்வு செய்த வத்தா அமைப்பினை ஏற்றுக் கொள்ளும் இந்த அரசுகள், கிழக்குகரையில் தேர்வு செய்த ஹமாஸ் அமைப்பினை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

இரண்டு கரையிலும் மக்கள் ஜனநாயக முறையிலேயே தமது தெரிவினைச் செய்திருந்தாலும், ஜனநாயகத்தின்போதகர்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் இவர்கள், தமது நலன்களுக்கு ஏற்றவர்களையே ஜனநாயக் பிரதிநிதிகளாகஏற்றுக் கொள்வர்.

இதுதான் இன்றைய உலக அரசுகளின் அம்மண நிலை.

இதனை கத்தலோனிய விவகாரத்தில் ஸ்பெயின் மத்திய அரசு மட்டுமல்ல பல நாடுகளின் நடத்தைகள் மூலம் புரிந்துகொள்ளலாம்.

முன்னராக கத்தலோனியாவின் பொதுவாக்கெடுப்புகளின் முடிவுகளை நிராகரித்த நாடுகளில் ஒன்றாக பிரான்சும்இருந்திருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.ஏன்எனில் ஒன்றுபட்ட பிரான்சில் பல பிராந்தியங்களில் சுதந்திரத்துக்கான குரல்கள் இன்னமும்உயிர்ப்புடனேயே உள்ளன. அதனைத்தான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரான்சின் கோர்ஸ்பிராந்தியத்தில் இடம்பெற்றிருந்த தேர்தல் முடிவுகளும் வெளிக்காட்டியுள்ளன.

ஏன்எனில் நடந்து முடிந்த பிராந்திய தேர்தலில் தனிநாட்டை தனது கொள்கையாக கொண்ட தேசியவாதக் கட்சியேஅதிக பெரும்பான்மை இடத்தினைப் பிடித்துள்ளது.

இப்பிராந்தியம் தெற்கு பிரான்சின் உள்ள ஒரு சிறு தீவு. தெற்கு பிரான்சில் இருந்த இரண்டு தீவுகளில்ஒன்றை இத்தாலி பங்கிட்டுக் கொள்ள மற்றைய தீவை பிரான்ஸ் பங்கிட்டுக் கொண்டது என்பதேஇப்பிராந்தியத்தின் கதை.

எப்படி கத்தலோனியாவுக்கு என சில சிறப்பு அரசியல அலகுகளை ஸ்பெயின் மத்திய அரசு வழங்கியுள்ளதோ,அதுபோலத்தான் பிரான்சின் மத்திய அரசும் இப்பிராந்தியத்துக்கு சிலவற்றை வழங்கியுள்ளது.

இருப்பினும் அவைகளை இப்பிராந்திய மக்கள் சலுகைகளாக பார்பதோடு அவற்றை நிராகரித்து வருகின்றனர்.

குறிப்பாக தமது மொழியை இப்பிராந்தியத்தின் முதன்மை மொழியாக பிரான்சின் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது இப்பிராந்திய மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றுமட்டுமல்ல, நிலம்மற்றும் நிதி உரிமையினையையும் இப்பிராந்திய மக்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில்தான் 2015ம் ஆண்டு ஒன்றுபட்ட பிரான்ஸ் என்ற முழக்கத்துடன் பிராந்தியங்களின பல்வேறுஉரிமைகளை பறித்து, மத்திய அரசின் கைகளில் இணைக்கும் புதிய அரசியல் சட்டத்திருத்தத்தினை பிரென்சு அரசுகொண்டு வந்திருந்தது.

இந்நிலையில் இடம்பெற்றிருந்த பிராந்திய தேர்தலில் இப்பகுதிய மக்கள் தனிநாட்டை வலியுறுத்தும் தேசியவாதகட்சிக்கு தமது பெருவாரியான வாக்குகளை வழங்கி பிரென்சு மத்திய அரசுக்கு தமது அரசியல் நிலைப்பாட்டைவெளிப்படுத்தியுள்ளனர்.

இதுபோலத்தான் தெற்கு பசுபிக் பகுதியில் தனது ஆளுகைக்குள் வதை;திருந்த நியு கலிடோனியாவுக்கு தனிநாடுஅங்கீகாரம் கொடுக்க வேண்டிய நெருக்கடி நிலையும் பிரென்சு அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இப்பிராந்தியத்தினை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் பிரான்ஸ், அப்பகுதிய மக்களின் அரசியல் விருப்பினைவெளிக்காட்டுவதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றினை நடாத்துவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் இணைங்கியிருந்தது.இந்நிலையில் அடுத்து வரும் 2018 நவம்பர் மாதம் பொதுவாக்கெடுப்புக்கான தேதியும் குறிக்கப்பட்டுள்ளநிலையில், அப்பிராந்தியம் தனது கைகளுக்குள் இருந்து நழுவிவிடக்கூடாது என்ற நோக்கில் அப்பிராந்தியமக்களை நோக்கி பல சலுகைகளுடன் பிரென்சு அரசு தற்போது இறங்கியுள்ளது.

இச்சலுகைகளுக்கு அப்பகுதி மக்கள் மயங்குவார்களா இல்லையா என்பது வரும் ஆண்டில் தெரிந்துவிடும்.இவ்வாறு வாக்கு எனும் ஆயுதம் கொண்டு அரசுகளுக்கு எதிராக ஒவ்வொரு பிராந்திய மக்களும் தமது அரசியல்விருப்பினை ஸபெயினிலும்,பிரான்சிலும் நடந்த தேர்தல்கள் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்.

இதனைநாம் சிறிலங்கா அரசாங்கம் தான் ஆக்கிரமிப்புச் செய்துள்ள தமிழர் தாயக மக்கள் மீது திணிக்கின்றதேர்தல் உடன் ஒப்பீடு செய்து பார்க்க முடியாது.காரணம் அடிப்படையில் தேர்தல் என்ற பொறிமுறை வெளிப்பார்வைக்கு ஒன்றாக தெரிந்தாலும் உள்ளீடுகள்வேறானதாக உள்ளன.

உதாரணத்துக்கு கத்தலோனியா மக்கள் தமது தனிநாட்டுக்கான அரசியல் விருப்பினை வெளிக்காட்டுவதற்குபொதுவாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதற்கு உரிய ஜனநாயக வெளி கிடைத்தது போல், இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கு தற்காலத்தில் ஜனநாயக வெளி உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

அந்த வெளியினை நோக்கிய அரசியல் செயல்முனைப்பில் தமிழர் தரப்பின் அரசியல் செயல்முனைப்பாகஇருக்க வேண்டும். புலத்தில் ' வேண்டும் பொதுவாக்கெடுப்பு' என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்ஒரு இயக்கத்தினை செயற்படுத்த முனைந்துள்ளது.

இந்த முனைப்பில் அனைத்து தமிழர் தரப்பும் இணைந்து கொள்ளுதலே கத்தலோனியா போன்றுபொதுவாக்கெடுப்புக்கான ஒரு ஜனநாயக வெளி தமிழர் தாயகத்தில் திறக்கும். அதற்கான கருத்துருவாக்கத்தில்உடனடியாக தமிழர்கள் களமிறங்க வேண்டிய பாடத்தனை இந்த தேர்தல்கள் உணர்த்துகின்றன.