Sanskathi
Feb 11

இந்தியாவிடம் கையை காட்டுங்கள் அவர்கள் ‘இல்லை’யென்று கூற முடியாது! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

இந்தியாவிடம் கையை காட்டுங்கள் அவர்கள் ‘இல்லை’யென்று கூற முடியாது! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

இக் கட்டுரையை எழுத எண்ணும் பொழுது, பல ஆண்மீக பாடல்களே எனது மனதில் உதிர்தனா. அதில் ஒன்று, “இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி அலைகிறார் ஞான கண்ணே”.

ஆம், இது மனித இயல்பு. நாம் பெருவாரீயாக எதையும் தேட வேண்டும் இதற்காக எங்கு வேண்டுமென்றாலும் அலையலாம். ஆனால், நாம் உணர மறுப்பது எண்ணவெனில், எமக்கு பக்கத்திலேயே நாம் தேடும் பொருள் இருக்கும் பொழுது உலகம் பூராகவும் தேடுகிறோம். இறுதியில் நாம் மிகவும் தூரத்தில் நிற்கும் பொழுது, “இவ் விடயமா! அது உங்களிற்கு பக்கத்திலேயே உள்ளது” என விபரமாக மாற்றர்களினால் விளக்கம் கொடுக்கும் பொழுது நாம் எமது வரட்டு கௌரவத்தை மறைத்து, பக்கத்தில் உள்ளவற்றை அணுகிறோம். இன்று இது தான் தமிழர் தாயாக பூமியான வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நிலை. அவர்கள் மட்டும் அல்லாது, புலம் பெயர்ந்து வாழும் வடக்கு கிழக்கு வாழ் மக்களது நிலையும் இதுவே.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தமிழர் பண்டிகையான “தை பொங்கல்”. இது தமிழர்களிடையே சமய, பிராந்திய, நாடு வேறுபாடின்றி கொண்டாடப்படும் தமிழர்  பண்டிகை. பிரித்தானிய பிரதமர் திருமதி திரேசா மேய், தமிழில் ‘வணக்கம்’கூறியதும், கனடிய பிரதமர், தமிழர் மரபு உடையான ‘வேட்டியை’ அணிந்ததும், இன்னுமொரு கனடிய அரசியல்வாதி, “தை பிறந்தால் வழி பிறக்குமென” தமிழில் கூறியதும், வேறு பல அந்நிய நாட்டு தலைவர்கள் வாழ்த்து கூறிய செய்திகள் பல ஊடகங்களில் காணப்பட்டது.

உண்மையை பேசுவதனால், கனடிய பிரதமர் கனடா வாழ் தமிழர்களின் வாக்கு வங்கியை பெறுவதற்காக எமது தேசிய உடையான வேட்டியுடன் காணப்பட்டார். இதே போன்ற பாணியிலேயே மற்றைய தலைவர்களும். ஆனால் நாங்களோ அவர்களது தேசிய உடையை பல தசாப்தங்களாக அணிந்தும், இன்று வரையில் அவர்களிடமிருந்து ஒழுங்கான உதவியை எமது அரசியல் தீர்விற்கு பெற்று கொள்ளவில்லை என்பதை எண்ணி, யாரும் கவலை அடைந்ததுண்டா?

இதற்காக கனடியா பிரதமர் மீதோ அல்லது பிரித்தானிய பிரதமர் மீதோ அல்லது வேறு நாட்டு தலைவர் மீது எந்தவித குறையும் கூற முன்வரவில்லை. அவர்களிற்கு நன்றாக ராஜதந்திரம் தெரிந்த காரணத்தினால், தமிழர் பண்டிகையான “தை பொங்கல்” அன்று தமது ராஜதந்திரத்தை கையாண்டார்கள் என்பதே உண்மை.

ஆனால் நாம் சிங்கள பௌத்த அரசுகளிடமிருந்து கடந்த எழுபது வருடங்களாக எந்தவித நிரந்தர அரசியல் தீர்வை பெறவில்லையென்பதை விசுவாசமாக உண்மையாக கவலைபடுபவர்கள் யாராக இருந்தாலும்,  அவர்கள் இதற்கான நடைமுறை காரணங்களை முதலில் ஆராய வேண்டும். இங்கு தான் எமது வரலாற்று தவறு ஆரம்பமாகியுள்ளது!

பல உலக தலைவர்கள் எமது தை பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து கூறியதை பெருமையாக கொள்ளும் நாங்கள், எமது தாய் நாடு, அயல் நாடு, எமது மொழி கலை கலாச்சாரம் போன்றவற்றில் பின்னிப்பிணைந்த நாடான இந்தியா துணை கண்டத்தின், ஆளும் தலைவர்களது மௌனம் பற்றி சிறிதளவேனும் அக்கறை கொண்டோமா? ஈழத்தமிழர்களில் நேற்று உதயமான அரசியல்வாதிகள் உட்பட, பெரும் பான்மையானவர்கள் கடைபிடிப்பது உணர்ச்சிவச எழுச்சி அரசியலே அல்லாது வேறு ஒன்றும் அல்லா.

சுவாசமாக சிந்திக்கும் ஒவ்வொருவரும், வைத்தியர்களினால் கொடுக்கப்படும் மருந்தை காலை மதியம் மாலை உட்கொள்வதுபோல், காலை மதியம் மாலை எமது இனத்திற்கு நாம் எதை உருப்படியாக பிரயோசனமாக செய்தோமென சிந்திக்க வேண்டும். நாம் எதையும் எமது இனத்திற்கு உருப்படியாக செய்யாது, மற்றவர்களில் பிழை பிடிப்பது என்பது எமது இனத்திற்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். பாரளுமன்ற உறுப்பினர்களானால் மட்டும் எமது இனத்திற்கு எதுவும் செய்ய முடியும் என்பது, இயலாமை சோம்பேறி தன்மை நிரம்பிய அரசியல்வாதிகளின் பித்தலாட்டம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம்

இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்தாகி இவ் வருடத்துடன், முப்பது வருடங்களிற்கு மேலாகின்றது. இது ஓர் சர்வதேச உடன்படிக்கை என்பதை எத்தனை ஈழதழிழர்கள் உணர்கிறார்கள்? இதில் தமிழ் என்ற வசனம் இல்லையென்று கூறுவதில் எவ்வித உண்மைகளும் இல்லை. 1987ம் ஆண்டு கைச்சாத்தான உடன்படிக்கையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சரித்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள  வேண்டும். இன்று வடக்கு கிழக்கு என்ற பதம் நடைமுறையில் இல்லை என்பதை விதண்டாவாத அரசியல் பேசுபவர்கள் உணருகிறார்களா?

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட உடனடி தீமைகள், நீண்டகால நன்மைகள் பற்றி இங்கு எழுதுவதனால், இவ் ஆய்வு பல நூறு பக்கங்களிற்கு நீண்டு கொண்டே போகலாம். ஆனால், இவ் ஒப்பந்தம் கைச்சாத்தாகியவுடன், தெற்கில் ஏற்பட்ட எதிர் விளைவுகளை, அதாவது பௌத்த சிங்களவாதிகள் எதற்காக? ஏன்? மேற்கொண்டார்கள் என்பதை, அவ்வேளையில் நாம் காவனத்தில் கொள்ள தவறியுள்ளோம்.

1957ம் ஆண்டு பாண்டரநாயக்க செல்வா ஒப்பந்தம், 1965ம் ஆண்டு டட்லி செல்வா ஓப்பத்தந்தை சிங்கள பௌத்த தலைவர்கள் எரித்து ஒரு தலைபட்சமாக மீறியதாக சரித்திரம் கூறும் நாங்கள், 1987ம் ஆண்டு யூலை மாதம் எதற்காக கொழும்பு முற்று முழுதாக எரிந்தது என்பதும், அங்கு இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதை வேளையில், அன்றைய இந்தியா பிரதமர் ராஜீவ் காந்தியை சிறிலங்காவின் கடற்படை சிப்பாய் ஒருவர், எதற்காக துப்பாக்கியினால் தாக்கினார் என்பதை மிக ஆளமாக ஆராய தவறி விட்டோம். இவை எல்லாம் எமது வரலாற்று தவறு.  

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களை, எமது ஆயுத போராட்டம் முடிவுற்றதை தொடர்ந்து ஆராயும் வேளையில், இப்படியான ஓர் தீர்வு திட்டத்தை, விசேடமாக இலங்கைதீவின் சிங்கள பௌத்த ஆட்சியாளரிடமிருந்து, அதாவது பாரளுமன்றத்திலிருந்து எம்மால் பெற்று கொள்ள முடியுமா என்பது, தற்பொழுது பகற்கனவாக தென்படுகிறது.

இடைக்கால தீர்வின் வழி முறை மூலம் தமிழர்களது வாழ்க்கை ஒளிமயமாக போகிறது என்போரும், இதற்குள் பூதம் இருக்குது என்போரும் இலங்கைதீவின் சரித்திரத்தை இன்னும் அறியாதவர்கள். சுருக்கமாக கூறுவதனால் - சமஷ்டி, இரு தேசம் ஒரு நாடு என்பது எல்லாம் சிறிலங்காவின் சிங்கள பௌத்த பெரும்பான்மை பாரளுமன்றத்தில், வடக்கு கிழக்கு வாழ் மக்களால் தற்போதைய நிலையில் எண்ணி பார்க்க முடியாத விடயங்கள். இவ் இடைகால தீர்வு என்பது சிங்கள பௌத்த அரசுகளின் வழமையான காலம் கடத்தும் திட்டமே அல்லாது வேறு ஒன்றுமில்லை.

யாதார்த்தம் என்ன?

ஆகையால் நாம் யாதார்த்தின் அடிப்படையில் பயணிக்க வேண்டும். முதலாவதாக எமக்கு ஓர் நாட்டின் ஆதரவு மிக மிக முக்கியமானது. இதற்கு தை பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து கூறியவர்கள் முன்வந்தாலும், அவர்கள் யாரும் இந்தியாவை கடந்து வந்து - எம்மை அங்கீகரிக்கவோ, எமக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்று தரவோ அல்லது ஆதரவு கரம் நீட்டவோ மாட்டார்கள்.

அடுத்து, ஏற்கனவே இலங்கை இந்தியா ஒப்பந்தந்தினால், ஈழத்தமிழர்களாகிய நாங்களும், இந்தியா தேசமும் பலவித கஷ்ட நஷ்டங்களிற்று ஆளாக்கப்பட்டுள்ளோம். இன்றைய வங்குறோட்டு அரசியல் நிலைக்கு, எம்மை தள்ளுவதற்கு துணை போன இந்தியா, எமக்கு பதில் கூற வேண்டிய பாரீய கடமை பாட்டில் உள்ளது.

இங்கு ஒன்றை மட்டும் அறுத்து உறுத்து கூற விரும்புகிறேன். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்குமானால், தமிழீழ மக்கள், அரசியல் அநாதைகளாக வாழ வேண்டிய நிலையே இலங்கைதீவில் என்றும் தொடரும். அதற்கான காரணங்களை இங்கு கூற வேண்டிய தேள்வை இல்லையென நம்புகிறேன்.

அதிஷ்டவசமாக, தற்பொழுது இந்தியாவின் ஆட்சியாளராக, பிரதமர் மோடி தலைமையிலான பாரதீக ஜனதா ஆட்சியில் உள்ளது. இவ் அரிய சந்தர்ப்பந்தத்தில், நாம் எமது முயற்சிகளை பயன் படுத்த தவறுவோமானால், நாம் எம்மை அறியாது எமது இனத்தை, பௌத்த சிங்களவாத அரசுகளிடம் படிப் படியாக சரணாகதி அடைய செய்கிறோம் என்பதே உண்மை.

இலங்கைதீவின் அரசியல் யாதார்தங்களை அடிப்படையாக கொண்டு, நடைமுறைக்கு சாத்வீகமான செயற்பாடு எது என்பதை நாம் தீர ஆராய வேண்டும். கொள்கை பற்றுள்ள யாரும், எமது தமிழீழ கொள்கையிலிருந்து ஒரு அணுவேணும் அசைந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தமிழீழம், எமது முதிய அரசியல் பெரும் தலைவர்களின் கொள்கை.

எமது காவலர், முன்னோடி கூறியது போல், – “எமது இலட்சியத்திலிருந்து மாறாது, எமது இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்”. இவ் அடிப்படையில், சிங்கள ஆட்சியாளர்களினால் சாட்டுபோக்கு சொல்லி காலம் கடத்த முடியாத, ஏற்கனவே சிறிலங்கா பாரளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறைவேற்றப்பட்ட ஒரே ஒரு அரசியல் தீர்வு, 13வது திருத்த சட்டம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஆகையால், கையில் உள்ள மறைக்கவோ மறுக்க முடியாத ஒரே ஒரு அரசியல் தீர்வான, மாகாண சபைகளை உருவாக்கிய 13வது திருத்த சட்டமான, இலங்கை - இந்திய ஒப்பந்தந்தை முற்று முழுமையாக நடைமுறை படுத்துங்கள் என்ற கோரிக்கையை நாம் இந்திய உட்பட, சர்வதேசத்தின் ஆதரவுடன்  சிறிலங்கா ஆட்சியாளரிடம் முன் வைக்க வேண்டும்.  

இவ் கட்டத்தில், ஒரு முக்கிய விடயத்தை நினைவுகூர விரம்புகிறேன். யார் என்ன தீர்வை பெற்றாலும், நாம் ஒர் நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவதை யாரும் நிறுத்த வேண்டிய அவசியமில்லை.

ஜப்பானும் அமெரிக்காவும்

இதற்கான சில வழி முறைகளை, நிலத்திலும் புலத்திலும் நாம் முன் நகர்த்த வேண்டும். அதற்கு முன்னர், உலகின் சில யாதர்த்தமான உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

வெற்றிகரமாக நடைபெற்ற எமது ஆயத போராட்டத்தை நிர்மூலமாக்கியதில் இந்தியாவிற்கு பாரீய பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த சில மாதங்களாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால்  வெளியிடப்பட்ட கருத்துக்கள், இந்தியாவின் பங்களிப்பை உறுதி செய்கின்ற போதிலும், இவர் மீண்டும் மீண்டும் இவற்றை கூறுவதில் பல கபடங்கள் நிறைந்து காணப்படுகிறது.

இங்கு தான், தமிழீழ மக்களிற்கும் இந்தியாவிற்கும் இடையில், பின்னல் போடும் பௌத்த சிங்களவாதிகளின் ராஜதந்திரம் தலை தூக்கியுள்ளது. உணர்ச்சி போக்கும் செயற்பாட்டாளர்கள், அர்பர்கள் இவ் விடயங்களிற்கு முன்னுரிமை கொடுத்து, இந்தியாவுடன் தொடர்ந்து பகைக்க வேண்டும் என்பதே பௌத்த சிங்களவாதிகளின் விரும்பம். இதனாலேயே இவ்விடயங்களை அவர்கள் ‘மூல மந்திரமாக’ தினமும் உச்சரித்து வருகிறார்கள்.

இங்கு உலகின் சில யாதார்தங்களின் அடிப்படையில் நாம் பயணிக்க வேண்டும். ஊதாரணத்திற்கு, ஜப்பானில் உள்ள ஹிரோசிமா, நாகசாக்கிக்கு 1945ம் ஆண்டு யூலை 6ம், 9ம் திகதிகளில் அமெரிக்காவினால் விசப்பட்ட மாபெரும் நாசகார அணு குண்டு பற்றி ஜப்பான் இன்றும் கதைத்து காலத்தை கடத்தியிருக்குமேயானால், இன்று ஜப்பான் உலகில் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக உருவாகியிருக்க முடியாது.   

இதேபோல் ஜப்பனினால் 1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் திகதி அமெரிக்காவின் பேல் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பற்றி அமெரிக்கா தொடர்ந்து ஜப்பானை குற்றம்சாட்டி கொண்டிருக்குமேயானால், இன்று அமெரிக்காவும் ஜப்பானும் மிக சிறந்த நம்பிக்கைகுரிய நண்பர்களாக உலகில் திகழ முடியாது.

அமெரிக்காவினால் ஹிரோசிமா, நாகசாக்கி மீது விசப்பட்ட குண்டுகளின் நாசகார விளைவுகளை, இன்றும் ஜப்பானிய மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஆகையால், எமது மாபெரும் ஆயுதப் போராட்டத்தை முன்னின்று நடத்திய எமது முன்னோடி, போரில் இந்தியாவின் பங்களிப்பை நிட்சயம் நன்றாக அறிந்து தெரிந்திருந்த பொழுதிலும், தனது 2008ம் ஆண்டு நவம்பர் உரையில், “எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி, என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்து கொள்ள விரும்புகிறோம். இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்குமிடையே பகைமையை வளர்த்துவிட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச்சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள்.” ஏன கூறியிருந்ததார்.

இது தான் அரசியல் முதிர்ச்சி, இது தான் அனுபவம். 2009ம் ஆண்டு மே மாதம் போர் முடிந்த பின்னர், முன்னோடியின் கருத்தை பெரிதாக்கி அதை நடைமுறைப்படுத்து மாறு என்னால் பல கட்டுரைகள் எழுதப்பட்ட பொழுது, இதற்கு சில விதண்டவாத கருத்துக்களை விதைத்து, தமது இணையதளத்தில் பாரிஸ், பிரான்ஸில் கருத்துக்கள் வெளியிட்ட தமிழர் என சொல்லப்படுவோர், இன்று எங்கு நிற்கிறார்கள், என்னத்தை செய்கிறார்கள் என்பதை பிரான்ஸ் வாழ் தமிழர் நன்கு அறிந்துள்ளார்கள். இவ் பெயர் வழிகள் யாவரும், தமது இனத்தின் லாபத்திற்கு மேலாக, தமது வங்கியை நிரப்புவதிலும், தமது சுயநலங்களில் அக்கறை கொண்டவர்கள் என்பதை, காலம் சென்று தான் பலர் அறிந்துள்ளார்கள்.

ஆகையால் முன்னோடியின் விசுவாசிகள், ஆதரவாளர்களாக யாராக இருந்தாலும், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் கூறப்பட்ட விடயங்களிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவை தவிர்ந்த வேறு எந்த செயற்பாடும், ஈழத்தமிழர்களிற்க எந்த விடிவையோ, அரசியல் தீர்வையோ கொடுக்க போவதில்லை என்பதே யாதார்த்தம்.

இந்தியாவை நோக்கிய பிரச்சாரம்

தமிழர்களது தாயாக பூமியான வடக்கு கிழக்கு வாழ் மக்கள், ‘சென்ற பாஸ்ஸிற்கு கை காட்டும்’, நிலையில் இருந்து விடுபட்டு, எமக்கு நன்மை பயக்கும் எதிர்கால செயற்பாடுகளில் கரிசனை செலுத்த வேண்டும். இதன் மூலமே இந்தியாவின் உதவியை நாம் தேட முடியும். இவர்கள் உதவியின்றி, நாம் இலங்கைதீவில் எதையும் சாதிக்க போவதில்லை என்பதை நீண்டகால சரித்திரம் யாதார்தம் எமக்கு பாடம் புகட்டுகிறது.

இவற்றிற்கு முதல் கட்டமாக, நிலத்திலும் புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்கள் யாவரும், இந்தியாவின் ஆட்சியாளர்களிற்கு, யாதார்த்தின் அடிப்படையில் மனுக்களை அனுப்ப வேண்டும்.

இதேவேளை கபட நோக்கமற்று செயலாற்றும் எமது பிரச்சார பிரங்கிகள் யாவரும், இந்தியாவை நோக்கி செயற் திட்டங்களை முன் வைக்க வேண்டும். இவற்றை செய்ய தவறுவோர் யாவரும், தமிழினத்தை அழிவுப் பதையில் இட்டு செல்லும் கபடமான சிந்தனை கொண்டவர்கள் என்பதே உண்மை.

ஐ.நா. மனித உரிமை சபையின் செயல் திட்டங்களை பொறுத்த வரையில், அவர்கள் தமது நிகழ்ச்சி நிரல்களிற்கு ஏற்ப பயணிக்கிறார்கள். இதில் சிறிலங்கா தவறுவது பற்றிய விடயத்தை, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் கையாழ்வார்கள். 

ஆகையால் ஜெனிவாவில், ஐ.நா.விற்கு வெளியில் நடைபெறும் இடம்பெறும் ஈழத்தமிழர்களது செயற்திட்டங்கள், ஆக்கபூர்வமாக அமைய வேண்டுமானால், அவை யாவும் இந்தியவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

ஊர்வலங்கள், விழிப்பு போராட்ங்கள், மனு கையாளிப்பு போன்றவற்றை, புலம் பெயர்வாழ் மக்கள், இந்தியாவின் தூதுவரலாயங்களை நோக்கியதாகவும் நகர்த்த வேண்டும். அதேவேளை, நாட்டில உள்ளவர்கள் தமது பிராந்தியத்தில் உள்ள  இந்தியாவின் உப-தூதுவரலாயங்கள் நோக்கி படையெடுக்க வேண்டும். இல்லையேல் இந்தியா தொடர்ந்தும் கும்பகர்ணன் படலத்தையே வாசிப்பார்கள்.

நாம் இக் கடமைகளிலிருந்து தவறுவோமானால், இவை பௌத்த சிங்கள ஆட்சியாளர்களிற்கு பாரீய நன்மைகளை கொடுக்கும்.

தமிழீழ மக்களின் எதிர்காலம் பற்றி ஆக்கறை விசுவாசம் கொண்ட யாவரும், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் எமது முன்னோடி கூறியதற்கு அமைய, வேலை திட்டங்களை எதிர்காலத்தில் தன்னும் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இன்னும் சில வருடங்களில், எமது தாயாக பூமியான வடக்கு கிழக்கு முற்று முழுதாக பௌத்த சிங்கள பிரதேசமாக மாற்றம் பெறுவது நிட்சயம். சிங்கள பௌத்த அரசிடம் கையேந்தி நிற்கும் கபடவாதிகளிற்கு, இவ் வேலை திட்டத்தை நடைமுறை படுத்துவதற்காகவே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆகையால். வெள்ளம் வரும் முன் அணையை கட்டுங்கள். 

என்னால் இங்கு குறிப்பிடப்பட்ட இந்தியாவின் பங்களிப்பு பற்றி, மாற்று கருத்து கொண்டுள்ள, தகமை தகுதியுள்ள யாருடனும், அங்கீகாரம் உள்ள ஊடகத்தில் கருத்து பரிமாற்றத்திற்கு என்று தாயாராகவுள்ளேன் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

“இந்தியாவிடம் கையை காட்டுங்கள்,

அவர்கள் ‘இல்லை’யென்று கூற முடியாது!

உரிமையுடன் கேட்டு பாருங்கள்,

அவர்கள் உடன்படிக்கையை மீற முடியாது”.

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...