Sanskathi
Feb 12

இளைஞரை கொன்று தலைமறைவான கொலையாளி: பொறி வைத்து பிடித்த பொலிஸ்

இளைஞரை கொன்று தலைமறைவான கொலையாளி: பொறி வைத்து பிடித்த பொலிஸ்

கனடாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கொலையாளியை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.Calgary நகரை சேர்ந்தவர் லுகாஸ் ஸ்டாசர் (18). இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் திகதி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சம்மந்தமாக ஆஸ்மர் ஷலாஹ், பிரான்ச் கப்ரீரா மற்றும் ஜோச் பவுல்க் ஆகிய மூவரை பொலிசார் கைது செய்தனர்.ஆஸ்மர் மற்றும் பிரான்ச் குற்றவாளிகள் என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜோச்சுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி நாதன் பவுல் (22) என்ற இளைஞர் பொலிசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

பொலிசார் பவுலை தேடி வந்த நிலையில் தற்போது தென்கிழக்கு ஆசியாவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.இதையடுத்து அவரை கனடாவுக்கு பொலிசார் அழைத்து வரவுள்ளனர். பின்னர் பவுல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.