Sanskathi
Feb 13

ஆட்சியமைக்க ஐ.தே.க. அழைப்பு விடுத்தால் பேச்சுவார்த்தைக்கு வர தயார்;TNA

ஆட்சியமைக்க ஐ.தே.க. அழைப்பு விடுத்தால் பேச்சுவார்த்தைக்கு வர தயார்;TNA

தமது கட்சியின் கொள்கைகளை மதிக்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்க தாம் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைப்பதற்கு அக்கட்சி உயர் மட்ட உறுப்பினர்களினால் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் இதற்காக வேண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்வது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் வினவியதற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனும் இக்கருத்தில்தான் காணப்படுகின்றார். சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுக்கப்படுமாயின் பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராகவே உள்ளோம்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பெரும்பாலான சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் இந்த வெற்றியை மையமாக கொண்டு ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

முன்னாள் போராளியை நாடுகடத்தாதே! மெல்பேர்ணில் கவனயீர்ப்புப்போராட்டம்! முன்னாள் போராளியை நாடுகடத்தாதே! மெல்பேர்ணில் கவனயீர்ப்புப்போராட்டம்!...
வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்...
ஈகையர் வணக்க நிகழ்வு ஈகையர் வணக்க நிகழ்வு...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால்... நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால்......
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு...
பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்! பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்!...
தமிழின அழிப்பு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி பேரணி...