நீட் தேர்வை ஆதரிப்பதால் பாஜகவுடன் கூட்டணி என்று அர்த்தமில்லை.. சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!
ஆண்டாள் மற்றும் நீட் விவகாரத்தை ஆதரிப்பதால் பாஜகவுடன் கூட்டணி என அர்த்தமில்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆண்டாள், நீட் விவகாரத்தை வைத்து பாஜகவுடன் தேமுதிக கூட்டணி என எண்ணக்கூடாது என்று அவர் கூறினார்.
நீட் தேர்வினால் சாமானிய மக்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதனை ஆதரிப்பதாகவுத் பிரேமலதா கூறினார்.
மேலும் நாங்கள் யார் கூட்டணிக்கும் செல்லமாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு குற்றவாளி என அறிவித்ததால் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது.