Sanskathi
Mar 12

எரிக் சொல்ஹெய்மிடம் உதவி கோரினார் ஜனாதிபதி மைத்திரி!

எரிக் சொல்ஹெய்மிடம் உதவி கோரினார் ஜனாதிபதி மைத்திரி!

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார்.

எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருக்கிறார். இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி, புதுடெல்லியில் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  

இதன்போது, இலங்கையில் தற்போது 28 சதவீதமாக இருக்கின்ற வன அடர்த்தியை, 32 சதவீதமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் சுற்றாடல் பாதுகாப்புக்கான ஐக்கிய நாடுகளின் உதவிகளையும் அவர் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர, நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர்கள்