Sanskathi
Mar 13

9 பொதுமக்களை தவறுதலாக கொன்ற எத்தியோப்பிய படை

9 பொதுமக்களை தவறுதலாக கொன்ற எத்தியோப்பிய படை

எத்தியோப்பிய படையினர் கிளர்ச்சியாளர்களென நினைத்து 9 பொதுமக்களை கொன்றிருப்பதோடு இந்த தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த பொதுமக்கள் ஒரோமோ விடுதலை முன்னணி கிளர்ச்சியாளர்கள் என்று தவறுதலாக அடையாளம் காணப்பட்டதாக எத்தியோப்பிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய எத்தியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படையினருக்கு இந்த பொதுமக்கள் தொடர்பில் தவறுதலான தகவல் கிடைத்ததை அடுத்து பொருத்தமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எத்தியோப்பிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட படையினர் கைது செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகிறது. கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி பிரதமர் ஹைலமரியம் டெசலேகன் திடீரென்று தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நாட்டில் பதற்ற மற்றும் ஸ்தரமற்ற சூழல் நீடித்து வருகிறது. 

மாவீரர்கள்