Sanskathi
Mar 13

முஸ்லிம் மக்கள் அர­சின் மீது நம்­பிக்­கையை இழந்­து­விட்­டனர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­விப்பு

முஸ்லிம் மக்கள் அர­சின் மீது நம்­பிக்­கையை இழந்­து­விட்­டனர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­விப்பு

முஸ்லிம் மக்கள் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்­கையை  இழந்­து­விட்­டனர். அத­னால்தான் கண்டி பிரச்­சி­னையை கட்­டுப்­ப­டுத்த மஹிந்த ராஜ­பக் ஷ்வை தலை­ யி­டு­மாறு முஸ்லிம் மதத் தலை­வர்கள் கேட்­டுக்­கொண்­டனர் என முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் தவி­சா­ள­ரு­மான ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். 

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்சி காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. கடந்த அர­சாங்க காலத்­திலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­போது அதனை கார­ணம்­காட்டி முஸ்லிம் மக்­களை மஹிந்த ராஜ­பக்ஷ்­வி­ட­மி­ருந்து தூரப்­ப­டுத்­தினர். அத்­துடன் அந்த மக்கள் நிம்­ம­தி­யாக வாழும் சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தாக தெரி­வித்தே இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. 

ஆனால் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்­றை­யெல்லாம் அர­சாங்கம் எதி­ர­ணியின் சதித்­திட்டம் என்றே தெரி­வித்து வந்­தது. தற்­போது கண்டி திகன பிர­தே­சத்தில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வத்­தையும் அர­சாங்கம் எங்கள் மீது குற்­றம்­சாட்டி தப்­பிக்­கவே முயற்­சித்­தது. என்­றாலும் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முஸ்லிம் மக்கள் உணர்ந்­து­கொண்­டனர். அத­னால்தான் முஸ்லிம் மதத்­த­லை­வர்கள் மஹிந்த ராஜ­பக்ஷ்வை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர்.

அத்­துடன் கண்டி அசம்­பா­வி­தத்தை தடுத்து நிறுத்த தலை­யீடு செய்­யு­மாறும் அர­சாங்­கத்தை தொடர்ந்து நம்­ப­மு­டி­யாது என்றும் முஸ்லிம் மத்­தத்­த­லை­வர்கள் மற்றும் சிவில் அமைப்­புக்கள் மஹிந்த ராஜ­பக்ஷ்வை சந்­தித்து கோரிக்கை விடுத்­தனர்.

அந்த கோரிக்­கைக்­க­மை­யவே மஹிந்த ராஜபக்ஷ் மறுநாள் கண்­டிக்கு சென்று நிலைமை தொடர்பில் பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யாடி வன்­மு­றை­களை வேறு பிர­தே­சங்­க­ளுக்கு பர­வி­வி­டாமல் தடுக்க நட­வ­டிக்கை எடுத்தார். அத்­துடன் முஸ்லிம் நாடு­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வெளி­நாட்டு தூது­வர்கள், உயர் ஸ்தானிகர் ஆகி­யோ­ருடன் கதைத்து நிலை­மையை விளங்­கப்­ப­டுத்­தினார்.

இவை அனைத்­தையும் அர­சாங்­கமே மேற்­கொண்­டி­ருக்­க­வேண்டும். ஆனால் பிரச்­சி­னையை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்­கத்­துக்கு எந்த தேவையும் இருக்­க­வில்லை. 

அத்­துடன் மஹிந்த ராஜபக்ஷ் தலை­யிட்டு நிலை­மையை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கும்­போ­துதான் அர­சாங்கம் செயற்­பட ஆரம்­பித்­தது. மஹிந்த ராஜ­பக்ஷ்வின் தலை­யீடு அர­சாங்­கத்­துக்கு பாரிய பிரச்­சி­னை­யாக அமைந்­தது. ஏனெனில் முஸ்லிம் மக்­களின் மன­மாற்­றத்தால் முஸ்­லிம்கள் மீண்டும் மஹிந்த ராஜ­பக்ஷ்­வுடன் இணைந்­து­வி­டு­வார்கள் என்ற அச்சம் ஏற்­பட்­டது. அதனை போக்­கு­வ­தற்கு அர­சாங்கம் குறு­கிய அர­சியல் நோக்­கத்­துக்­காக இன்று மிகவும் கீழ்த்­த­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது.

அத்­துடன் நாட்டில் வன்­முறை கலா­சாரம் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கும்­போது, மக்­களின் சிந்­தனை அதன்பால் இருக்­கும்­போது அர­சாங்கம் மிகவும் திட்­ட­மிட்­ட­மு­றையில் ஆபத்­தான சட்­ட­மூ­ல­மான வலுக்­கட்­டா­ய­மாக காணாமல் போவதில் இருந்து பாது­காக்கும் சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூ­லத்தை அவ­ச­ர­மாக அங்­கி­க­ரித்­துக்­கொண்­டது. 

ஆனால் இதற்கு முன்னர் இரண்டு முறை இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பு காரணமாக வாபஸ்பெறப்பட்டது. ஆனால் இம்முறை அதில் திருத்தம் மேற்கொள்வதாக தெரிவித்து, நாட்டில் வன்முறைசம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சட்டமூலத்தை அவசரமாக பாராளுமன்றத்தில் அங்கிகரித்துக்கொண்டது என்றார். 

மாவீரர்கள்