Sanskathi
Apr 16

சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு

சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு

சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திரா மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது.

ஆந்திரா மாநிலத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு காங்., இடது சாரிகட்சிகள், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றம் ஆந்திரா பிராத்யேக ஹூடா சாதானா சமிதி யும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

12,000 பஸ்கள் நிறுத்தம்

முழு அடைப்பு காரணமாக, 12,000 பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதியுற்றனர். ஆந்திராவுக்கு செல்லும் தமிழக பஸ்கள் எல்லைப்பகுதியிலே நிறுத்தப்பட்டன. மேலும் திருமலைக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.மேற்கு கோதாவரி, அனந்தபூர் மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.