Sanskathi
Apr 19

பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது

பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது

பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களின் ஒருவரான சமயங் என்பவரின் உதவியாளர் மீகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் மினுவாங்கொட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரையும் நேற்று மாலை கைது செய்துள்ளதாக விஷேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணையை மீகொட மற்றும் மினுவாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வருடம் மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.