Sanskathi
May 12

NAFTA பேச்சுவார்த்தைகளுக்கு விரைவில் தீர்வு: ஃபிறீலான்ட் நம்பிக்கை

NAFTA பேச்சுவார்த்தைகளுக்கு விரைவில் தீர்வு: ஃபிறீலான்ட் நம்பிக்கை

NAFTA பேச்சுவார்த்தைகளுக்கு விரைவில் தீர்வு: ஃபிறீலான்ட் நம்பிக்கை

prelandகனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வருவதற்கு சிறிது காலம் செல்லும் என கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தைகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வோஷிங்டனில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், இந்த பேச்சுவார்த்தைகளில் நிச்சயமாக முன்னேற்றங்கள் உள்ளன. இவை எப்போது இறுதி முடிவுக்கு வரும் என்ற அனுமானங்களை நான் வெளியிட விரும்பவில்லை.

ஒரு குழந்தைப் பேறு போல, பேறுகால வலி சிறிது நேரமாகவோ, பல மணி நேரங்களுக்கு நீண்டதாகவோ இருக்க கூடும். அதேபோலவே இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நிலையும் காணப்படும் என கூறினார்.