Sanskathi
May 14

இளவரசர் ஹரி – மார்க்லேயின் திருமணத்துக்கு மகாராணி எழுத்து மூல அனுமதி!

இளவரசர் ஹரி – மார்க்லேயின் திருமணத்துக்கு மகாராணி எழுத்து மூல அனுமதி!

பிரித்தானிய இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் திகதி நடைபெற உள்ளது.அரச குடும்பம் முறைப்படி இந்த திருமணத்துக்கு லண்டன் ராணி முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்நிலையில், இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இன்று முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார்.

அதற்காக ராணி எலிசபெத் கையொப்பமிட்ட ஒப்புதல் கடிதத்தை பக்கிங்காம் அரண்மனை இன்று வெளியிட்டுள்ளது.இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.