Sanskathi
May 14

புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர், அனைத்து அமைச்சுக்களின் தலைமைச் செயலாளர்கள் உடனான சந்திப்பில் தலைமை வகித்துள்ளார்.

தமது தலைமையிலான புது அரசாங்கத்தின் செயல்பாடுகள், பொறுப்புகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

காலை மணி 9.10-க்கு, பெர்டானாவிலுள்ள யாயாசான் பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

பிரதமருக்கு முன்னதாகவே, அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ டாக்டர் அலி ஹம்சா அலுவலகத்தில் இருந்துள்ளார்.இவர்களுடனான சந்திப்பின் போது தமது அடுத்த கட்டப்பணிகள் குறித்து மகாதீர் கலந்து பேசியுள்ளார்.