Sanskathi
Jun 13

கர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி

கர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த மேலவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.,வால் சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. தொடர்ந்து காங்கிரஸ் -மஜத தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றன.

இந்நிலையில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் ஆறு காலி இடங்களுக்காக நடைபெற்ற தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலிலும் பா.ஜ தனித்து போட்டியிட்டது.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்த காங்கிரஸ், மஜத இந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன.இதற்கான முடிவு தற்போது வெளியாகி உள்ளது. இதில் 4 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இரண்டு இடங்களில் மஜத வெற்றிபெற்றுள்ளது.

மாவீரர்கள்