Sanskathi
Jun 20

சந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன் ஞானசாரர்

சந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன் ஞானசாரர்

வெலிக்கடை சிறைச்சாலையில் 18 மதகுருமார்கள் இருக்கின்றனர். இவர்களில் 15 பௌத்த பிக்குகள் இருக்கின்றார்கள்.

ஆகவே அங்கிருக்கும் பௌத்த பிக்குகளைப் போன்றே ஞானசார தேரரும் ஒரு சாதாரண கைதியாக நடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 18 பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருமார்களில்...15 பேர் பௌத்த பிக்குகள், இவர்கள் 6 மாதங்கள் - 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பௌத்த பிக்குகள் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்து மதகுரு ஒருவரும், கிறிஸ்தவ மதகுரு ஒருவரும், இஸ்லாமிய மதகுரு ஒருவரும் சிறைத்தண்டனையை அனுபவிக்கின்றனர்.

கொலை, வல்லுறவு, கொள்ளை, வன்முறை, மற்றும் அரசுக்கு எதிராக சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இதில் சந்திரிக்காவை கொலை செய்ய முயற்சித்த கொலை வழக்கில் இந்து மதகுரு ஒருவர் தண்டனை அனுபவித்து வருகின்றார்.

இந்த தகவல்களை சிறைச்சாலை ஆணையாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.மேலும், ஞானசார தேரருக்கு கைதிகள் வழக்கமாக அணியும் அரைக்காற்சட்டையே வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்கள்