Sanskathi
Jun 20

விடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்

விடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்

கிளிநொச்சி - அறிவியல் நகரின் காட்டுப் பகுதியில் சுமார் 50 இலட்சம் பெறுமதியான நவீன ஸ்கானர் இயந்திரத்தின் உதவியுடன் புதையல் தோண்டியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் தப்பியோடியுள்ளார்.

அத்துடன் குறித்த நவீன ஸ்கானர் இயந்திரமும் இதன்போது அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட கருவியும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் இன்று கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதையல் தோண்டப்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொள்கலன் தொடர்பில் பொலிஸாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு, எதுவும் கிடைக்காத நிலையில் தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.