Sanskathi
Jun 20

சுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு!

சுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு!

புங்குடுதீவு மாணவி, பாலியல் படுகொலை வழக்கின் பிரதான எதிராளியாக இருந்தவரை, தப்பிக்கவிட்ட வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறை நீதிமன்றில் அறிவிக்கப்ட்டுள்ளது.

வித்தியா வழக்கின் தற்போதைய மரண தண்டனைக் கைதியான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிச்சென்ற வழக்கின் விசாரணைகளே தற்போது முற்றுப்பெற்று, வழக்குக் கேவை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்றில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள்ளது.

முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியேரை எதிராளியாக கொண்ட இவ்வழக்கு இன்று யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சப் இன்ஸ்பெக்டர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளநிலையில் மற்றொரு பிணையிலுள்ள சந்தேக நபரான வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று மன்றில் ஆஜராகியிருந்தார்.

மன்றில் முன்னிலையான அரச சட்டவதி இவ்வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று வழக்கின் கோவை தற்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து இவ்வழக்கை எதிர்வரும் அக்டோபர் மாதம் பத்தாம் திகதிவரை நீதவான் ஒத்தி வைத்தர்.

மாவீரர்கள்