Sanskathi
Jul 10

பிரதமர் ஜஸ்டின் ரூடோ லட்வியாவுக்கு பயணமாகிறார்

பிரதமர் ஜஸ்டின் ரூடோ லட்வியாவுக்கு பயணமாகிறார்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று லட்வியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.அங்கு நேட்டோ அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிவரும் கனடிய படைகளைச் சந்திக்க உள்ள பிரதமர், அங்கு பணியாற்றிவரும் கனடிய இராணுவத்தினருடன் கலந்துரையாடவும் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிரசெல்ஸ் செல்லும் கனடியப் பிரதமர் அங்கு இந்த வாரத்தில் நடைபெறவுள்ள நோட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

நேட்டோ அமைப்பில் கனடிய படைகளின் பங்களிப்பினை மீள் உறுதிப்படுத்தும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் அமைவதாக கருதப்படுகிறது.

2014ஆம் ஆண்டில் ரஷ்ய ஆதரவுக் குழுக்கள் உக்ரெய்னின் கிழக்கு பிராந்தியமான கிரைமியாவை ஆக்கிரமித்ததை அடுத்து, அங்கு நேட்டோ படைகளால் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கனடா தலைமையேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லட்வியாவில் ஏறக்குறைய 450 கனடிய படைகள் நிலை கொண்டுள்ளன. அது தவிர அல்பேனியா, செக் குடியரசு, இத்தாலி, போலந்து, ஸ்லோவோக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் படைகளும் அங்கு முகாமிட்டுள்ளன.